• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நகராட்சி ஆணையாளரை பாஜகவினர் அச்சுறுத்தி மிரட்டல்.., காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு…

ByG.Suresh

Dec 2, 2023

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் முதல் நிலை ஒப்பந்ததாரரும், பாஜக மாவட்ட செயலாளருமான கந்தசாமி என்பவருக்கு பணி முடித்தும் முழுத் தொகையும் வழங்கவில்லை எனக் கூறி பாஜக மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையிலான பாஜகவினர் நகராட்சி ஆணையரை சந்திக்க சென்றனர். அப்போது ஆணையாளர் வெங்கடேச லட்சுமணன் உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்கில் பேசிக் கொண்டிருந்தார். ஆதலால் அனுமதி மறுத்து சிறிது நேரம் காத்திருக்குமாறு அலுவலர்கள் சமாதனப்படுத்தி சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறினர். இதனை அடுத்து தனது ஆதரவாளருடன் அலுவலகத்தின் வெளியே காத்திருந்த மேப்பில் சக்தி திடீரென அலுவலகத்தில் நுழைந்து ஆணையாளர் அறையில் மீட்டிங்கில் இருந்த ஆணையாளரை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆணையாளர் சுதாரித்துக் கொண்டு அவர்களிடம் உரிய விளக்கம் கூறி அனுப்பி வைத்தார். இச்சம்பம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பாக்கிய நிலையில், நகராட்சி ஆணையாளர் வெங்கட லட்சுமணன் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் பி கே அரவிந்தை நேரில் சந்தித்து தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அச்சுறுத்தும் வகையில் மேபல் சக்தி ஒப்பந்ததாரர் கந்தசாமி மற்றும் சிலர் அத்துமீறி தனது அலுவலகத்தில் நுழைந்ததாக கூறி புகார் மனு அளித்தார்.