• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு சீல் வைத்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

ByNamakkal Anjaneyar

Mar 7, 2024

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் சுமார் 10 கோடி ரூபாய் வரி நிலுவை உள்ளது. இதனால் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு சீல் வைத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் திருச்செங்கோடு நகரப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் வரி வசூல் 10 கோடிக்கு மேல் பாக்கி உள்ளதால் நகராட்சி ஆணையாளர் சேகர் தலைமையில் முறையான வரி கட்டாத அரசு நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மத்திய அரசு நிறுவனமான சந்தைபேட்டை பகுதியில் அமைந்துள்ள பி எஸ் என் எல் அலுவலகம் கடந்த மூன்று ஆண்டுகளாக 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளார்கள் நகராட்சி சார்பில் பலமுறை வலியுறுத்தியும் வரி கட்டாததால் இன்று ஆணையாளர் சேகர் தலைமையில் பிஎஸ்என்எல் கட்டிடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது, மேலும் தனியார் கட்டிடங்களும் தொழில் வரி கட்டாததால் பூட்டி சீல் வைக்கப்பட்டது மத்திய அரசின் அங்கமான பிஎஸ்என்எல் நிறுவனம் நகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,

நகராட்சி ஆணையாளர் இந்த அதிரடி ஆய்வின் ஆய்வை பற்றி கூறும்போது திருச்செங்கோடு நகராட்சியில் சுமார் 10 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ளது. இதனால் நகராட்சி ஊழியர்களுக்கு பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் நகராட்சி சம்பந்தப்பட்ட பணிகளிலும் தொய்வு ஏற்படுவதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெறும். பலமுறை வலியுறுத்தியும், வரி செலுத்தாதவர்களின் பெயரினை திருச்செங்கோட்டில் முக்கிய பகுதிகளில் பிளக்ஸ் பேனர் ஆக வைக்கப்படும் என ஆணையாளர் சேகர் எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் சரவணன் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் வருவாய் ஆய்வாளர்கள் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.