• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை மன்னர் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே பல்திறன் போட்டி

ByKalamegam Viswanathan

Mar 11, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினிப் பயன்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பல்திறன் போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் எம்.விஜயராகவன் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் எஸ்.ராஜகோபால் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மதுரை ப்ளஸ் பாயிண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.நிர்மல்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கற்று சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களிலிருந்து 768 கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள். உள்தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் அ. ராமசுப்பை யா, இயக்குநர் சி.பிரபு ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். ஆணுக்கு நிகராக பெண் மாணவி சிலம்பம் சுவற்றியது.மாணவர்கள் முகத்தில் பெயிண்டிங், அடுபில்லா சமையல் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதல் வழங்கப்பட்டன. முன்னதாக கணினி அறிவியல் துறைத் தலைவர் ஜி.தேவிகா வரவேற்றார். நிகழ்ச்சியை பேராசிரியர் பவானி தொகுத்து வழங்கினார். பேராசிரியர் வனிதா, வாசுகி, ஹேமாவதி ஆகியோர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். உதவிப் பேராசிரியர் ஆர். வாசுகி நன்றி கூறினார்.