மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.,
இந்த முகாமினை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் நேரில் ஆய்வு செய்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை துவக்கி வைத்தார்., தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்., உசிலம்பட்டி திமுக ஒன்றிய மற்றும் நகர் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.,

கர்ப்பிணி தாய்மார்களுக்கான சிறப்பு மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனை பிரிவு, எலும்பு மற்றும் நரம்பியல் பிரிவு, இருதய மருத்துவ பிரிவு மற்றும் கண் மருத்துவ பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது., மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான பரிசோதனை மற்றும் சான்றிதழ்களும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.,






