• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

குருவாயூர் கோவிலுக்கு ரூ.1½ கோடி காணிக்கை வழங்கிய முகேஷ் அம்பானி

ByA.Tamilselvan

Sep 18, 2022

முகேஷ் அம்பானி குருவாயூர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் . கோயில்க்கு காணிக்கையா ரூ.1½ கோடி வழங்கினார்.
இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர். பின்னர் அவர் கோவில் அதிகாரிகளிடம் அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். சாமி தரிசனம் முடிந்ததும் முகேஷ் அம்பானி கோவிலுக்கு காணிக்கையாக ரூ.1 கோடியே 51 லட்சத்திற்கு காசோலை வழங்கினார். முகேஷ் அம்பானி வழங்கிய காணிக்கை கோவில் அன்னதான திட்டத்திற்கு செலவிடப்படும் எனக்கூறப்படுகிறது.