வர இருக்கும் தமிழக பொதுத்தேர்தல் இன்னும் ஒரிரு மாதங்களில் வர இருப்பதையொட்டி, தமிழக அளவில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கட்சி சார்பில் தற்போது விருப்ப மனுக்கள் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கரூர் மாவட்ட அளவில், கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய 4 தொகுதிகளுக்கும் சுமார் 150 க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெற்ற நிலையில், அதிமுக தலைமைக்கழகமும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக போக்குவரத்து துறையின் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கரூர் அடுத்துள்ள கோடங்கிப்பட்டி முத்தாளம்மன், பட்டாளம்மன் ஆகிய கோயில்களில் முறைப்படி சுவாமி தரிசனம் செய்து அதிமுக தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கிய நிலையில், தற்போது மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக கட்சியின் சாதனைகளையும், அதிமுக கட்சியின் காலண்டர்களை பொதுமக்களிடையே நேரிடையாக விநியோகித்து அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், தற்போதைய திமுக ஆட்சியின் விலைவாசி ஏற்றங்களையும் மக்களிடையே விவரித்து அதிமுக விற்கு வாக்குகள் கேட்டு வருகின்றார்.

மேலும், கரூர் மாநகராட்சியின் வார்டு எண்-47 க்கு உட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர். வீடு, வீடாகவும், ரோடு, ரோடாகவும் நடந்தே சென்று தனது பிரச்சாரத்தினை தீவிரப்படுத்தி வருகின்றார். மேலும், இப்பகுதியின் பொதுமக்களின் அனைத்து பிரச்ச்னைகளையும், எதிர்கட்சித்தலைவரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தின் முதல்வர் ஆனதும் உடனடியாக தீர்வு கண்டு தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், கரூர் தெற்கு பகுதி, வார்டு எண் – 47 க்கு உட்பட்ட இடைச்சிகிணத்தூர், முத்துக்கவுண்டன் புதூர், கரட்டுப்பாளையம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் இணைந்து பொதுமக்களுக்கு அதிமுக ஆட்சியில் செய்த சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் அச்சடிக்கப்பட்ட 2026 தினசரி காலண்டரையும் வழங்கி, 2026 சட்ட மன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்க கூறி வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார்.
மேலும், செல்லுமிடமெல்லாம், அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகின்றனர்




