மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு மீது மத்திய பிரதேச அமைச்சர் நரேந்திரசிவாஜி படேல் குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், ‘ஸ்ரீசென் பார்மா’ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து உட்கொண்டு, மத்திய பிரதேசத்தில் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
குழந்தைகளின் சிறுநீரக செயழலிப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தில், பெயின்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் ‘டை எத்திலீன் கிளைசால்’ என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்ததும் கண்டறியப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுதும் அம்மருந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு மீது மத்திய பிரதேச அமைச்சர் நரேந்திரசிவாஜி படேல் விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசின் அலட்சியம் மிகவும் மோசமானது. அவர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது. கோல்ட்ரிஃப் நிறுவன மருந்துகளைப் பரிசோதித்து பகுப்பாய்வு சான்றிதழ் வழங்கப்பட்டதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசு மீது ம.பி. அமைச்சர் குற்றச்சாட்டு
