மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சரவணப் பொய்கையில் கிறிஸ்தவ மதங்களில் இருந்து மதம் மாறிய இந்துக்களுக்கு மீண்டும் இந்து மதத்தில் இணையும் “தாய் மதம் தழுவும் விழா” இணைப்பு விழா நடைபெற்றது.

மதுரை இந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி மாவட்ட பொறுப்பாளர் அரசு பண்டி மற்றும் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் தாய் மதம் தழுவும் விழா நடைபெற்றது.
அனுப்பானடி பகுதியில் வசித்து வரும் சுமார் 21 குடும்பங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்தில் இணையும் தாய் மதம் தழுவும் விழா எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்சரவண பொய்கையில் நீராடி பின்னர் சரவணப் பொய்கையில் உள்ள ஆறுமுக சொன்னதில் கந்தசஷ்டி கவசம் படித்து வெற்றிவேல் வீரவேல் என முழங்கி தாய் மதத்தில் இணைந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப தூண். சிக் கந்தர் பாதுஷா தர்கா உள்ளிட்டபல்வேறு சர்ச்சைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து முன்னணி சார்பில் தாய் மதம் தழுவுவிழா என நிகழ்ச்சி நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.