திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவதாக சென்ற கோட்டை தெரு பொதுமக்கள் 20 பேர் கைது செய்யப்பட்டு திருநகர் தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பாஜக நிர்வாகிகள் அவர்களை சந்தித்து வருகின்றனர்.

தற்போது முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா திருநகர் தனியார் மகளில் கைது செய்து தங்க வைக்கப்பட்ட திருப்பரங்குன்றம் மக்களை சந்திக்க வருகை தருகிறார் அதனைத் தொடர்ந்து அறநிலைத்துறை கண்டித்து மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமையில் பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர் பின் அவர்களையும் கைது செய்து திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான இந்து அமைப்பினர் மற்றும் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள் கைது செய்து அடைத்தனர்




