மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கூறுகையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 4 அரசியல் கட்சிகள் 2019 ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை எனத் தெரிவித்தும் விளக்கம் கேட்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

அகில இந்திய தாயக மக்கள் முன்னேற்றக் கட்சி, எழுச்சி தமிழர்கள் முன்னெற்றக் கழகம், மனித உரிமைகள் கழகம் மற்றும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் ஆகிய நான்கு கட்சிகளும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசுச் செயலாளர் முன்பாக கட்சிகளின் தலைவர் / பொதுச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தெரிவித்தார்.