• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தெலுங்கானாவிலும் பரவியது குரங்கு அம்மை பாதிப்பு

ByA.Tamilselvan

Jul 25, 2022

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் வெளிநாடுகளுக்கு செல்லாமலேயே இவருக்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் காமெட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சொறி ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை காமெட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். வாலிபரின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது . இதில் அவருக்கு குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் 3பேர்,டெல்லியில் ஒருவர் , தெலுங்கானாவில் ஒருவர் என இந்தியாவில் மொத்தம் 5 பேருக்கு குரங்கு அம்மை தொற்று எற்பட்டுள்ளது.