விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட மயூரநாதசுவாமி திருக்கோயில் மற்றும் இராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூரில் மிகப்பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாமி அமபாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு மகா ருத்ரயாகம் மாலை ஐந்து மணி முதல் நடைபெற்றது.

பின்னர் மூலவர் சிதம்பரேஸ்வரர்க்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை நறுமண பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் சோமவார பூஜையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சேத்தூர் திருக்கண்ணீஸ்வரர் திருக்கோயில், இராஜபாளையம் சொக்கர் கோயில், மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி திருக்கோயில்,,தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலிலும் கார்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.








