அமெரிக்க அதிபராக டிராம்ப் கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட போது, உலக நாடுகளில் உள்ள அதிபர்களிடம் நல்ல நட்புக் கொண்டிருந்தார். அந்த வகையில் ஒரு நாடு இந்தியாவும், நடந்து முடிந்த அண்மை அமெரிக்கா தேர்தலில். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுத்த பின், அவரது அணுகுமுறை கடந்த காலம் போன்று இல்லாது ஒரு புதிய டிராம்ப்-பாக மாறிப்போனார். இந்தியர்கள் உரிய சான்றுகள் இல்லாத இந்தியர்கள் திரும்ப அனுப்பப்படுவார்கள் என சொன்னதுடன், காலம் தாழ்த்தாது உடனடியாக நடவடிக்கையில் இயங்கினார். இந்தியர்களில் 104-பேர் முதல் கட்டமாக திருப்பி அனுப்பப்ட்டார்கள். அனுப்பிய விதம் தான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து இந்தியர்களை வேதனை கொள்ள செய்த காட்சி. மோடியின் கேள்வி கேட்கும் திறன் அற்ற நிலை அம்பலமாகி உள்ளது.
இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்ட்டவர்கள் எதோ சர்வதேச குற்றவாளிகள் போல் கைகள் மற்றும் கால்களை விலங்கு சங்கிலியால் இணைத்தது, இந்த தண்டனைகளில் குழந்தைகள் உட்பட இணைத்தது குறித்து, இந்திய நாடாளுமன்றத்தில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆதரித்து பேசியது. ஈட்டி பாய்ந்துள்ள நெஞ்சில் மேலும் இந்திய அரசே ஈட்டிகளை பாய்ச்சுவது போல் அமெரிக்காவின் செயலை ஆதரித்து பேசியது தான்.

இந்திய பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி அமெரிக்கா அதிபர் டிராம்பினை சந்திக்க சென்ற நிலையில், தொடக்க நிலை அறிமுகத்திற்கு முன்பாகவே, அதிபர் டிராம்ப் கேட்ட கேள்வி. அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதிததற்கு அமெரிக்கா கண்டன பார்வை கொண்டுள்ளது. இந்தியா விதிக்கும் வரி இந்தியா மீதே பாயும் என எச்சரிக்கை தொனியில் அதிபர் டிராம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீது மற்ற நாடுகளை விட இந்தியாவே அதிகம் வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா எவ்வளவு இறக்குமதி வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை இந்தியா மீது நாங்களும் விதிப்போம்.

இந்தியாவோடு வணிகம் செய்ய எலான்மஸ்க் விரும்புகிறார், ஆனால் இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுகிறது. இந்திய அரசின் அதிக வரி காரணமாக, இரண்டு நாடுகளிடையே வணிகம் செய்வது மிக கடினம் என அமெரிக்கா அதிபர் டிராம்ப் நேரடியாகவே இந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்பியது உலக பந்தின் எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்கிறது.
இந்தியர்கள் அமெரிக்காவில் சந்திக்க போகும் பல்வேறு சோதனைகளுக்கு முதல் அத்தியாயத்தை இந்தியாவின் வரி விதிப்பு முறை ஏற்படுத்திவிட்டது.



