• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இன்று பஞ்சாப் வருகிறார் மோடி

Byகாயத்ரி

Jan 5, 2022

பஞ்சாபில் ₹42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இங்கு பல்வேறு நலத் திட்டங்களை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று வருகை தருகிறார்.டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலை, பெரோஸ்பூர் செயற்கைக்கோள் மையம், அமிர்தசரஸ்-உனா நான்கு வழிச்சாலை, முகேரியன்-தல்வாரா அகல ரயில் பாதை, கபூர்தலா, ஹோசியாபூரில் 2 புதிய மருத்துக் கல்லூரிகள் உள்பட ₹42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதனையொட்டி, பெரோஸ்பூரில் 10,000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, ராணுவத்தினருக்கு பஞ்சாப் மாநில போலீசார் முழு ஒத்துழைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தவிர, டிரோன் குழுவும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகைக்கு சில விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.