• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஷின்சோ அபே நினைவு நாள் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பு

ByA.Tamilselvan

Sep 27, 2022

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நினைவுநாள் நிகழ்ச்சி பிரதமர் மோடி பங்கேற்றார்.ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் இவர் தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தநிலையில் ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு இன்று ஜப்பான் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார். டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். பின்னர் இருநாட்டு தலை வர்களும் பேசினார்கள், இது தொடர்பாக பிரதமர் மோடி….துயரம் நிறைந்த இந்த நேரத்தில் எங்களது இந்த சந்திப்பு நடந்தது. கடந்த முறை ஜப்பான் வந்த போது நீண்ட நேரம் அபேயுடன் உரையாடினேன். இந்தியா அவரை இழந்து தவிக்கிறது. அவர் இல்லாதததை இந்தியா உணர்கிறது. இவ்வாறு அவர் தெரி வித்து உள்ளார்.