• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மும்பையில் நவீன முறை ஓட்டல்- ரயில்வே நிர்வாகம் அசத்தல்

Byகாயத்ரி

Nov 20, 2021

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ‘போட்’ ஓட்டல் (Pod Hotel) எனப்படும் கூண்டு போன்ற நவீன தங்கும் அறைகள் பயணிகள், பொது மக்கள் வசதிக்கு ரயில்வே நிர்வாகம் திறந்துள்ளது.


ரயில் பயணிகளை கவர, இந்தியன் ரயில்வே நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், போட் ஓட்டல் எனப்படும் கூண்டு போன்ற நவீன வசதிகளுடன் தங்கும் அறைகளை, ரயில் பயணிகள் மற்றும் பொது மக்கள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது.


மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே, மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ‘போட்’ ஓட்டல் எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட தங்கும் அறைகளை அண்மையில் திறந்து வைத்தார். இது கேப்சூல் ஓட்டல் எனவும் அழைக்கப்படுகிறது.சிறிய கூண்டு போன்ற இதன் அறைகளில் படுத்து தூங்கும் அளவுக்கும், உட்கார்ந்து இருக்கும் அளவுக்கும் இடம் இருக்கும். இந்த அறையில் டி.வி., ஏ.சி., படுக்கை, சிறிய லாக்கர் மற்றும் வை-பை உள்ளிட்ட வசதிகள் உலகத்தரத்தில் இடம்பெற்று இருக்கும்.


இந்த அறையில் தங்குவதற்கு, 12 மணி நேரத்திற்கு 999 ரூபாய்; 24 மணி நேரத்திற்கு 1,999 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த அறைகளில் பயணிகள் மட்டுமின்றி பொது மக்களும் தங்கலாம். நாட்டிலேயே முதல் முறையாக மும்பை சென்ட்ரலில் இந்த ‘போட்’ ஓட்டல் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.