• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

த.வெ.க.வில் இணைந்த அமமுக மற்றும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்..,

ByKalamegam Viswanathan

Jul 17, 2026

தமிழகத்தில் கடந்த மே மாதம் பத்தாம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்று தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று சிறப்பான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திமுக அதிமுக அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து ஏராளமானோர் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் அருகே கோவில்பட்டி பகுதியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி கனி மற்றும் அவருடன் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் டாக்டர் கணேசன் ஏற்பாட்டில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த அமமுக நிர்வாகி மற்றும் மாற்றுக் கட்சியினரின் வாகனங்களில் தமிழக வெற்றி கழக கொடியை பொருத்தி அவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டார்.

பின்னர் கனி மற்றும் நிர்வாகிகள் கூறுகையில் விக்கிரமங்கலம் பகுதியிலும் உசிலம்பட்டி தொகுதியிலும் தமிழக வெற்றிக்கழகம் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெறவும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும் பாடுபடுவோம்.

மேலும் தமிழக முதல்வரின் நலத்திட்டங்களை கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து செயல்படுவோம் என்று கூறினர். நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.