மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விழா காலங்களில் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாத நிலையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இது குறித்து நிழற்குடை அமைக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்துஅரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் கட்டப்பட்டு வரும் புதிய புதிய நுழைவு வாயில் மற்றும் அதன் அருகில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்த பகுதியில் நிழற்குடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளையும் மேற்கொண்டார். அந்த பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனை உரிமையாளர் மற்றும் தனியார் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தி நிழற்குடை அமைப்பது குறித்து ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

தொடர்ச்சியாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏவின் முயற்சிக்கு இந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் ஆய்வு செய்வதோடு விட்டு விடாமல் அடுத்தடுத்து நடவடிக்கைகளில் இறங்கி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயணிகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரை கேட்டுக் கொண்டுள்ளனர். ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கொரியர் கணேசன் மேற்கு ஒன்றிய நிர்வாகி சரவண கண்ணன் சமயநல்லூர் கிளை நிர்வாகி சேர்வை பசும்பொன் நகர் பகுதி நிர்வாகி ராம்குமார் கேபிள் மணி உள்பட பலர் உடன் இருந்தனர்.