• Fri. Nov 13th, 2026

தீபத்தூண் தீபம் ஏற்றும் விவகாரம் சம்பந்தமாக மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..,

ByKalamegam Viswanathan

Nov 13, 2026

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள ஸ்ரீகந்தருக்கு சொந்தமான தீபத்தூணில் மஹாதீபம் ஏற்றக்கோரி கடந்த திமுக ஆட்சியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவு அளித்திருந்தது.

ஆனால் முஸ்லிம்களை தாஜா செய்யும் வகையில் தீபத்தூணில் தீபம் ஏற்றினால் மதநல்லிணக்கம் கெட்டுவிடும் மதகலவரம் வந்துவிடும் என்று தவறான விசமப்பிரச்சாரம் செய்து நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் சிக்கந்தர் தர்ஹாவிற்கு ஆதரவாக கடந்த வருடம் கார்த்திகை தீபத்திருளான்று மஹாதீபம் ஏற்றவிடாமல் இந்துவிரோத திமுக அரசு தடுத்து நிறுத்தியது.இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு வாக்களித்தால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய காரணத்தால் நம்பிக்கையின் அடிப்படையில் இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருப்பரங்குன்றம் உள்பட அதிக தொகுதியில் தவெக வெற்றி பெற செய்து திமுகவிற்கு தக்கப்பாடம் புகட்டி தோல்வி அடைய செய்தார்கள்.

தற்போது இந்துக்களின் தயவால் தமிழக முதலமைச்சராக இருக்கும் திரு.ஜோசப்விஜய் அவர்கள் தலைமையில் நடக்கும் தவெக அரசாவது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்தும்,இந்துக்களின் பழங்கால கோரிக்கையை ஏற்றும் வருங்கின்ற தீபத்திருளான்று தீபத்தூணில் தீபம் ஏற்றுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் கடந்த ஆட்சியில் திமுக செய்த தவறுக்கு மேல் தவறாக தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தவெக அரசு மேல்முறையீடு செய்து இந்துக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த தவெக அரசுக்கு இந்துமக்கள்கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

அதேபோல் கடந்த 2005ல் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தீபத்தூண் தீபம் ஏற்றும் விவகாரம் சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் இந்து அமைப்பினரும்,தர்ஹா நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.அப்பொழுது கடந்த 1996ல் உயர்நீதிமன்ற நீதிஅரசர் மாண்புமிகு கனகராஜ் அவர்களின் தீர்ப்பின் படி சிக்கந்தர் தர்ஹா சுவற்றில் இருந்து 15 மீட்டர் அப்பாற்பட்டு எங்கே வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவை மதித்து சிக்கந்தர் தர்ஹாவின் சுமார் 50 மீட்டருக்கு அப்பால் தொலைவில் இருக்கும் தீபத்தூணில் மஹாதீபம் ஏற்ற எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனை இல்லை என்று மதநல்லிணக்கத்தை பேணி காக்கும் வகையில் அன்று தர்ஹா நிர்வாகத்தினர் கையெழுத்திட்டு கூறி இருந்தார்கள்.

ஆனால் அதே இன்றைய தர்ஹா நிர்வாகத்தினர் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தீபத்தூணில் தீபம் ஏற்றக்கூடாது என்று இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.இத்தனை காலங்கள் அமைதியாக இருந்துவிட்டு வேண்டுமென்றே திட்டமிட்டு மதப்பிரச்சனையை உண்டாக்கும் நோக்கத்தோடு தர்ஹா நிர்வாகம் செயல்படுவதை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மதமென பிரிந்தது போதும் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று நிலைபாட்டில் இருந்த தர்ஹா நிர்வாகத்தினர் தற்போது திசைமாறுவது நோக்கம் இந்து முஸ்லிம் என்ற மதநல்லிணக்கத்தை சீர்குழைக்க வேண்டும். மதகலவரத்தையும், மதபிரச்சனையும் உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் தற்போதைய தர்ஹா நிர்வாகத்தினர் செயல்படுகிறார்கள் போல் தெரியவருகிறது.இதனை உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக முறையாக சந்திப்போம்.

மேலும் இந்த தர்ஹா நிர்வாகத்தில் பொருப்பில் இருப்பவர்கள் பின்னால் தடைசெய்யப்பட்ட பிஎப்ஐ என்ற பயங்கரவாத அமைப்பும் அதனுடைய அரசியல் கட்சி அங்கமான எஸ்டிபிஐயும் மற்றும் இந்து சனாதன மறுப்பு சிந்தனை கொண்ட இடதுசாரிகளின் நக்சல் அமைப்புகளும் இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம்.

தர்ஹா வழிபாட்டைஒரு கூட்டம் மட்டும் தான் ஆதரிக்கிறதே தவிர அல்லாவை தவிர வேற இறைவன் இல்லை என்று தவ்ஹித் ஜமாத் போன்ற ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாய அமைப்புகள் தர்ஹா வழிப்பாட்டை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறை அளவீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளது இந்த தவெக அரசு.கச்சத்தீவை திமுக அரசு இலங்கைக்கு தாரைவார்த்ததை போல் தமிழ்கடவுள் முருகப்பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலையை அரபு நாட்டில் இருந்து வந்த சிக்கந்தர் தர்ஹாவிற்கு தவெக அரசு தாரை வார்க்க ஏதேனும் திட்டமிடுகிறதா? தொல்லியல்துறை மலையை அளவீடு செய்தால் தவெக அரசு எதற்கு அச்சப்பட வேண்டும்?

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை இந்துசமயஅறநிலையத்துறை கட்டுபாட்டில் நிர்வாகம் செய்யும் தவெக அரசு.முருகப்பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் கோயிலையும், மலையின் புனிதத்தன்மையை பாதுகாக்காமல் கோயிலின் வருமானத்திலும்,கோயில் உண்டியலில் இந்துக்கள் அளிக்கும் காணிக்கையில் இருந்தும் பணத்தை எடுத்து ஸ்ரீகந்தபெருமானுக்கு எதிராகவும் சிக்கந்தர் தர்ஹாவிற்கு ஆதரவாகவும், இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்கிறது தவெக அரசு.
அதாவது திருக்கோயில் பணத்தை எடுத்து திருக்கோயிலுக்கு எதிராக செயல்படுவது தான் மதசார்பற்ற அரசா?

இந்துசனாதன எதிர்ப்பு கொண்ட திமுக இந்துக்களுக்கு விரோதி கட்சி என்றால்,
அனைவருக்குமான அரசு என்றும்,அனைத்து மத வழிபாட்டு நம்பிக்கையை நேசிக்குமான அரசு என்றும்,ஜோசப்விஜய் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும், தமிழக முதலமைச்சர் ஆவதற்காகவும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் தூக்கிவிட்டு தற்போது திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு எதிரா தீபம் ஏற்றவிடாமல் திரு.ஜோசப் விஜய் அவர்கள் தடுத்து நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

இந்துசனாதன எதிர்ப்பு கொண்ட திமுக இந்துக்களுக்கு விரோதி கட்சி என்றால்,
இந்துக்களுக்கும் முருகப்பெருமானுக்கு துரோகம் செய்யும் கட்சி தவெக என்பது போல் முருகப்பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுகிறது.

மேலும் மதுரை எம்பியாக இருக்கும் சு.வெங்கடேசன் அவர்கள் மதுரை குப்பை தொகுதியானதை பற்றி ஆனதை பற்றி கவலை கொள்ளாமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை பற்றி கவலை கொண்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மதுரை மாவட்ட காவல்துறை உள்பட அரசுதுறையை ஏவிவிட்டு கடந்த வருடம் தீபத்திருநாளில் கலவர பூமியாக மாற்றி தீபத்தூணில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்து நிறுத்தினார்.அதேபோல் இந்த வருடமும் தீபத்திருநாளில் கலவர பூமியாக மாற்ற முயற்சிப்பார்.இதற்கு வெங்கடேசனுக்கு ஆதரவாக மின்வெட்டை பற்றி கவலை படாமல் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏயான மின்சாரத்துறை அமைச்சர் நிர்மர்குமார் அவர்களும் செயல்படுவார் போல் தெரியவருகிறது.

ஏனென்றால் இந்த வருடம் தீபத்தூணில் தீபம் ஏற்றவிடாமல் எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டுமென்றும், வருகின்ற 17ம் தேதி அன்று தீபம் விவகாரம் சம்பந்தமான உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நீடிக்க செய்ய வேண்டுமென்று கடந்த இரண்டு நாட்களாக மதுரை ஆட்சியாளர் அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை அழைத்து அதிகாரிகள் மறைமுக கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வருகின்றன.

இது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும், இந்திய அரசியல் அமைப்பு சட்ட ரீதியான தீர்ப்புகளுக்கும் எதிரான அநீதியாகும்.

முருகப்பெருமானின் முதற்டை வீடான திருப்பரங்குன்றத்தில் இந்துவிரோதியான சு.வெங்கடேசனின் பேச்சை கேட்டு அமைச்சர் என்ற மமதையில் நிர்மல்குமார் அவர்கள் ஆட நினைத்தால் கூடா நட்பு கேடாய் அமைந்துவிடும் என்பதையும்,முருகப்பெருமானின் கோபத்திற்கு ஆளாகி விடும் என்பதையும் இந்நேரத்தில் நிர்மல்குமார் அவர்களுக்கு அறிவுரையை தெரிவித்து கொள்கிறோம்.

ஆகவே தீப விசத்தில் திமுக செய்த தவறை தவெக அரசு அரசியல் செய்யாமல் அனைவருக்குமான அனைத்து மதத்திற்கான மதசார்பற்ற அரசாக செயல்படும் விதமாக வருகின்ற நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர்நீதிமன்ற உத்தரவை மதித்தும்,இந்துக்களின் வழிபாட்டு உரிமையின் கோரிக்கையை ஏற்கும் விதமாக தீபத்தூணில் கார்த்திகை மஹாதீபம் ஏற்றவேண்டி வருகின்ற 22-11-2026 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 3:00 மணி அளவில் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள மயில் மண்டபத்தில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி கந்தசஷ்டி கவசம் ,பாராயணம் மற்றும் கூட்டு வழிபாடு பிரார்த்தனை செய்து அதனை தொடர்ந்து மாலை 4:00 மணி அளவில் 16கால் மண்டபம் முன்பாக தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தக் கோரி தவெக அரசை வலியுறுத்தி இந்துமக்கள்கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்திரு.அர்ஜுன்சம்பத் அவர்களும்,தமிழகம் முழுவதும் உள்ள இந்துமக்கள்கட்சி தொண்டர்களும், சன்னியாசிகளும்,துறவிகளும்,
ஆதீனங்களும்,திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு கூட்டமைப்பினர்களும் மற்றும் முருகப்பக்தர்களும் கலந்து கொள்கிறார்கள் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செய்தியை தெரிவித்து கொள்கிறேன்.