மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளில் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகவும் புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும்

கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ விடம் பகுதிபொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இரும்பாடி பாலம் முதல் பாலகிருஷ்ணாபுரம் பிரிவு வரை சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் மாயாண்டி கோவில் முன்பு நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்ட வெங்கடேசன் எம் எல் ஏ ஜேசிபி எந்திரம் மூலம் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் பேரூராட்சி தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி சோழவந்தான் எஸ் எஸ் கே ஜெயராமன் வாடிப்பட்டி பேரூர் நிர்வாகி பிரகாஷ் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் வாடிப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெகன் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி ஒன்றிய இளைஞரணி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நல்லதம்பி திலீபன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் காசிலிங்கம் நன்றி கூறினார்.




