• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ அய்யப்பன் வேண்டுகோள்

ByP.Thangapandi

Jun 13, 2024

மந்தமாக நடைபெறும் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு பணிகள் 8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஓர் ஆண்டுகளாக மந்தமான நிலையில் நடைபெற்று வரும் இந்த பேருந்து நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு பணிகளை இன்று உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உசிலம்பட்டி நகராட்சி பொறியாளர் பட்டுராஜனிடம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்த எம்எல்ஏ அய்யப்பன்.,

சுமார் 8 கோடி நிதியில் கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலைய பணிகள் கால தாமதமாக நடைபெற்று வருவதாகவும், ஊராட்சி நிர்வாகத்திடமிருந்து நகராட்சிக்கு வழங்கப்பட்ட 8 ஏக்கர் நிலப்பரப்பில் முதற்கட்டமாக ஒரு ஏக்கரை விரைந்து கையக படுத்தி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், மேலும் தேவையான 9 கோடி நிதியை அரசிடம் பெற்று விரைந்து கட்டுமான பணிகளை தாமதமின்றி முடித்து 6 மாத காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.