• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காணும் பொங்கலன்று காணாமல் போன குழந்தைகள் பத்திரமாக மீட்பு..!

Byவிஷா

Jan 18, 2024

நேற்று காணும் பொங்கல் அன்று, சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில், காணாமல் போன 26 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் நேற்று கூடியிருந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் காவல் துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று சுமார் 5 ஆயிரம் குழந்தைகள் பெற்றோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தனர். காவல் உதவி மையங்களின் வாயிலாக குழந்தைகளின் கைகளில் அடையாள அட்டை அணிவிக்கப்பட்டு, கடற்கரைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையிலும், நேற்றைய கூட்ட நெரிசலில் 26 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிந்து தொலைந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கை காரணமாக, காணாமல்போன குழந்தைகள் அனைவரும் விரைந்து மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.