தமிழக அமைச்சரவையில் சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அinளைவநசள னரசயiஅரசரபயn சயபரியவாi pழசவகழடழை உhயபெநன
இந்தநிலையில், திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் இன்று (மே 8) இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கைவளத்துறை சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சீனியர் அமைச்சர்களின் இலாகாக்கள் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது
அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்
