நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள சூழலில் திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.
இந்நிலையில் வரும் 23ஆம் தேதி விருதுநகர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாலை மார்க்கமாக அன்று மாலை உசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரப் பரப்புரையை முன்னிட்டு செய்யப்பட உள்ள முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது, போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் பரப்புரை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகள் கலந்து ஆலோசனை செய்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அமைச்சர் மூர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.