• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் பி.கிதாஜீவன் திடீர் ஆய்வு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கிதாஜீவன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கிதாஜீவன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கி வரும் சகி – ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
பொது இடங்களில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு அனைத்து விதமான உதவிகள் கட்டணமின்றி இலவசமாக வழங்க சகி ஒருங்கிணைந்த சேவை மையம் ( SAKHI One stop centre ) உருவாக்கப்பட்டுள்ளது .
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப ஒரு நிழற்குடையின்கீழ் அவசர மீட்பு வசதி , மருத்துவ உதவி , காவல்துறை உதவி , சட்டஉதவி , உளவியல் ஆலோசனைகள் மற்றும் தற்காலிக தங்கும் வசதி ஆகியவைகள் வழங்கி வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்க 24 மணிநேரமும் ஒருங்கிணைந்த சேவை மையம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வருகிறது .
ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் மகளிருக்கான இலவச உதவி எண் 181 மூலம் பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விபரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .
பின்னர் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார் அமைச்சர் பி.கிதாஜீவன் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரியிடம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேனி மாவட்ட எஸ்பி, எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.