• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குமரி மேற்கு மாவட்டத்தில் 3080 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்.

குமரி மாவட்ட பகுதியான தக்கலை அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில்.இன்று மாலை(பெப்ரவரி_3)ல் திருவட்டார், கல்குளம், விளவங்கோடு, மற்றும் கிள்ளியூர் வட்டங்களை சேர்ந்த 3080 பயனாளிகளுக்கு பல்வேறு விதமான பட்டாக்களை தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பட்டாக்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். நிகழ்வில் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.