• Fri. May 3rd, 2024

பிற்பகல் நடக்க வேண்டிய தேர்வை காலையிலே நடத்தும் அதிகாரத்தை தலைமை ஆசிரியருக்கு யார் கொடுத்தது.?

தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசின் உதவிபெறும் பள்ளியான புனித மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள அரசின் உதவிபெறும் பள்ளியான புனித மேரிஸ் மேல் நிலைப் பள்ளியில் இன்று (2.2.2024, வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இரண்டாம் திருப்புதல் பொதுத்தேர்வு மதியம் நடைபெற இருந்தது. ஆனால் குளச்சலில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தமிழ் பொது தேர்வு 12ம் வகுப்புக்கான ஆங்கில பொதுத் தேர்வு மதியம் நடத்துவதற்கு பதிலாக அதன் தலைமை ஆசிரியர் ஆண்டி புஷ்ப ரெனித அவர்கள் சொந்த காரணங்களுக்காக காலையிலேயே அந்தத் தேர்வுகளை நடத்தி இருக்கின்றார்.

இது குமரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் செய்யப்பட்டு அவருடைய பரிந்துரையால் கல்வித் துறை அதிகாரிகள் புனித மேரீஸ் பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்தபோது, மதியம் நடப்பதற்கு பதிலாக காலைப் பொழுதிலேயே மாணவர்களுக்கு தேர்வு நடப்பதை கண்டு அந்தத் தேர்வை பாதியிலேயே ரத்து செய்தனர். அத்தோடு குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிக்கூடங்களுக்கும் 11ம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தமிழ் பொதுத்தேர்வு 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் பொது ஆங்கில தேர்வுக்கு மாற்று வினாத்தாள் அனுப்பப்படும் என்று கூறியதோடு, நாளை (3.2.2024) மூன்றாம் தேதி நடப்பதாயிருந்த மேனிலை அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிக்கூட நிர்வாகத்திற்கும் அறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்ற புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையில். (பெப்ரவரி_02)ம் தேதி பிற்பகல் நடக்க வேண்டிய தேர்வை காலையில் நடத்தும் அதிகாரத்தை தலைமை ஆசிரியருக்கு யார் கொடுத்தது.?

நாளை (பெப்ரவரி3)ம் தேதி.11 மற்றும் 12ம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் பொது ஆங்கிலம் தேர்வு குமரியில் மட்டும் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட கல்வி அதிகாரியின் செயலுக்கு தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பதே குமரியில் 12_ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் முன் நிற்கும் கேள்வி குறியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *