புதுக்கோட்டை மாநகராட்சி 16 ஆரம்ப சுகாதார நிலையம் காணொளி காட்சி வாயிலாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டம், காமராஜபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், ரூ.60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டடத்தினை, மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திறந்து வைத்தார்.

உடன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எம்.அப்துல்லா அவர்கள், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திருமதி. திலகவதி செந்தில் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.வை.முத்துராஜா அவர்கள் (புதுக்கோட்டை), திரு.எம்.சின்னத்துரை அவர்கள் (கந்தர்வக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லப்பாண்டியன் அவர்கள், புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் திரு.எம்.லியாகத் அலி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.சா.ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.விஜயகுமார் (அறந்தாங்கி) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)