காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற நிறுவனமான செல்வி ஸ்டோரின் மற்றொரு நிறுவனமான சோபா ஸ்டுடியோ பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் கலந்து கொண்டு சோபா ஸ்டுடியோவை திறந்து வைத்தார். திறப்பு விழாவை ஒட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் என ஏராளமானோர் இந்த திருப்புகழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த சோபா ஸ்டுடியோவில் பல்வேறு விதமான உள்நாட்டு வெளிநாட்டு சோபாக்கள் பல்வேறு வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு தயாராக உள்ளது. மலிவான விலையில் தரமான சோபாக்கள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.




