• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாஜக அண்ணாமலைக்கு அமைச்சர் ஐ பெரியசாமி பதில்..

ByKalamegam Viswanathan

Apr 14, 2023

சொத்துகுவிப்பு புகாரில் அவர்களிடம் (மத்திய அரசு) வருமானவரித்துறை, வருவாய்த்துறை உள்ளது விசாரிக்கட்டும். அதேபோல் அண்ணாமலைக்குவாட்ச் எப்படி வந்தது, அதேபோல் சொத்து எப்படி வந்தது என்று கணக்கு பார்த்துக் கொள்ளலாம்- மதுரை விமான நிலையத்தில் பாஜக அண்ணாமலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பதில் அளித்துள்ளார்
சென்னையில் இருந்து திண்டுக்கல் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது கூறிய ஊழல் புகார் குறித்த கேள்விக்கு அதெல்லாம் எதுவும் இல்லை. வருமான வரித்துறை, வருவாய்த்துறை அனைத்து மத்திய அரசிடம் தான் உள்ளது அவர்கள் வாட்ச் எப்படி வந்தது, அதேபோல் சொத்து எப்படி வந்தது என்று கணக்கு பார்த்துக் கொள்ளலாம்.
திருமங்கலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்த பெண் தற்கொலை குறித்த கேள்விக்கு:
வருகிற திங்கட்கிழமை இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் விசாரித்து அவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வோம்.ஊழல் பட்டியல் விவகாரத்தில் அண்ணாமலை மீதான நடவடிக்கை குறித்த கேள்விக்கு:
சட்ட வல்லுனர்கள் இன்று பேட்டி கொடுத்தனர் அதில் 15 நாட்களுக்கு வாய் வார்த்தையாக நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.அதன் படி 15 நாட்களுக்குள் வரவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதில் உள்ள எதுவும் நம்ப முடியாமல் உள்ளது.