அமைச்சர் எ.வ. வேலு திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடல் இணைப்பு கண்ணாடி இழைபாலத்தை ஆய்வு செய்தார். உடன் ஆட்சியர் அழகு மீனா, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தது. பாலம் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. புத்தாண்டு பிறப்பிற்கு இன்னும் 45 நாட்கள் இருக்கும் நிலையில் குறித்த நாளில் பாலத்தின் பணி நிறைவடையும் என்ற அவரின் நம்பிக்கையை தெரிவித்தார்.


