தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பாஜக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டி. சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனை ஒட்டி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக இளைஞரணி சார்பில் மினி மராத்தான் போட்டி 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள் பொதுப் பிரிவில் ஆண்கள் பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் மரத்தான் போட்டி நடைபெற்றது இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்றோர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் ரூபாய் 5000 ரொக்கமாகவும் இரண்டாம் பரிசு பெற்றோர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் 3000 ரொக்கமும் மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் 2000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.
இது தவிர ஒவ்வொரு பிரிவுகளிலும் 20 க்கும் மேற்பட்டோருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது பரிசுகளை சட்டமன்ற உறுப்பினர் ஜிஎன்எஸ் ராஜசேகரன் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மராத்தான் போட்டிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமாக கலந்து கொண்டனர். மராத்தான் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்ற மாணவனின் தாயார் பேசும்போது தொடர்ந்து மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் செயல்பட்டு வருவதாகவும் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.




