• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ட்ரீலீவ்ஸ் பள்ளியில் மினி மாரத்தான் போட்டி..,

ByPrabhu Sekar

Sep 1, 2025

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள டிரீலீவ்ஸ் குளோபல் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி ட்ரீலீவ்ஸ் பள்ளி நிறுவனர் சரவணன் தலைமையில் நடைப்பெற்றது.

மாணவர்களிடையே விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் நடைப்பெற்ற இந்த மாரத்தான் போட்டியினை உலக டிரையத்லான் லெவல் 1 பயிற்சியாளர் வினோலி ராமலிங்கம் கொடியசைத்த்து மாராத்தனை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பச்சை நிற டீசார்ட் அணிந்து சுமார் 500 மாணவர்கள் மாராத்தான் போட்டியில் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு ஈடாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுடன் இணைந்து மாராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் மாடம்பாக்கம் டிரீலிவ்ஸ் குளோபல் பள்ளியில் தொடங்கி மாடம்பாக்கம் கோழி பண்ணை வரை சென்று டிரீலிவ்ஸ் குளோபல் பள்ளி வரை சுமார்
5 கிலோமீட்டர் தூரம் நடைப்பெற்றது.

இதில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டினார்கள் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.