வேப்பம்பட்டி கிராமத்தில் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும், நீர் வழித்தட ஓடையில் சாலை அமைத்தும் கனிமவள கொள்ளை, மாவட்ட நிர்வாகம், நீர்வள மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, வேப்பம்பட்டி கிராமத்தில் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும், நீர் வழித்தட ஓடையில் சாலை அமைத்தும் கனிமவள கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
வேப்பம்பட்டி கிராமத்தில் கரட்டுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை-உத்தமபாளையம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ், கடந்த 22 -23 ஆம் ஆண்டு
வேப்பம்பட்டி கரட்டுக்குளம், கசிவு நீர்க்குட்டை தூர்வாருதல் மற்றும் வரத்து வாய்க்கால் தூர்வாரப்பட்டது.
வேப்பம்பட்டி கிராமத்தில், சின்னமனூர் சர்வே எண் 102, 3,00,000 லட்சம் திட்ட மதிப்பில்
உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப்பொறியியல் துறை உத்தமபாளையம் செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த பகுதியில் கனிமவள கொள்ளை நடத்துவதற்காக கண்மாய் கரையை அழித்தும் கண்மாய் பகுதியில் உள்ள மண்ணை அழியும், நீர்வரத்து ஓடையில் சாலை அமைத்து தற்போது கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருகிறது.