• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு கூட்டு பிரார்த்தனை..,

BySeenu

Apr 20, 2025

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் நாள் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நேற்று இரவு தேவாலயங்களில் நள்ளிரவு கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் ஆதித்தூதர் பேராலயத்தில் பேராயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் ஈஸ்டர் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது இயேசு கிறிஸ்துவின் 33 ஆண்டுகால வாழ்க்கை, அதில் ஏசு கிறிஸ்து போதித்த கருத்துகள், இயேசு கிறிஸ்து அனுபவித்த சித்தரவதைகள் மற்றும் இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்வுகள் ஆகியவை குறித்து தாமஸ் அக்வினாஸ் எடுத்துரைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கண்களை மூடி இயேசு கிறிஸ்துவை பிரார்த்தித்தனர்.