• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எம்ஜிஆர்-ன் 36ம் ஆண்டு நினைவு தினம்- கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி…

BySeenu

Dec 24, 2023

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எம்.ஜி.ஆர்- இன் 36ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், திரைப்பட துறையினர் அவரது சிலைக்கும், படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் அண்ணாசிலை பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்சுணன், கே.ஆர்.ஜெயராம் உட்பட பல்வேறு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் எம்ஜிஆர்-ன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.