நாகர்கோவிலை அடுத்துள்ள பார்வதி புரம் பகுதியில் உள்ள எம்ஜிஆர்
சிலையின் இடது கை பகுதி சமுக விரோதிகளால் சில நாட்களுக்கு முன் சேதப்படுத்துப்பட்டதை கண்டித்து.

தளவாய் சுந்தரம், நாஞ்சில் வின்சென்ட் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள்
அரசையும்,காவல்துறையை கண்டித்து எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதிமுகவினர் போராட்டத்தின் எதிரொலியாக. இரணியல் காவல்துறை சம்பவம் இடத்திற்கு நேரில் வந்து. தளவாய் சுந்தரம், நாஞ்சில் வின்சென்ட் உட்பட அங்கிருந்த கட்சியினரிடம் விரைந்து நடவடிக்கை எடுத்து. எம்ஜிஆர் சிலையின் கை பகுதியை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க படும் என உறுதியளித்ததின்
அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இரணியல் காவல்துறை இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிய போதும்,இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாத நிலையில்.
நாஞ்சில் வின்சென்ட் அவரது சொந்த செலவில் எம்ஜிஆர் சிலையின் உடைக்கப்பட்ட கை பகுதியுடன். சிலையின் மேடையில் கருப்பு வண்ண கிரனேட் கல்பதிக்கப்பட்டதுடன், சிலையின் பாதுகாப்பு கருதி,சிலையை சுற்றி சில்வர் கம்பியால் ஆன பாதுகாப்பு அரணமைத்ததுடன். சிலைக்கு மாலை இட அல்லது அதிமுக இயக்கத்தின் முக்கிய தினங்களில் மட்டுமே சிலை அருகே செல்லத்தக்க வகையில் கேட் அமைத்து அதை பூட்டு போட்டு பாதுகாக்கும் வகையில் அமைத்துள்ளனர்.

சிலை மேடைக்கு பூட்டு எதற்கு என நாஞ்சில் வின்சென்ட் இடம் கேட்டபோது. தமிழகத்தில் காவல்துறையில் போதுமான காவலர்கள் இல்லாத நிலையில். மக்கள் தலைவர் சிலையை நாங்களே கண் இமை காப்பது போல் காக்கிறோம்.
சீரமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையின் திறப்பு விழாவை. குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரத்தின் ஆலோசனையை கேட்டு திறப்பு விழா நாள் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.











; ?>)
; ?>)
; ?>)