• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

எம்ஜிஆர் பிறந்த தின விழா

ByKalamegam Viswanathan

Jan 17, 2024

சோழவந்தான் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த தின விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன் தலைமையில் எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இளைஞர் அணி நகர செயலாளர் கேபிள் மணி இனிப்பு வழங்கினார். இதில் அதிமுக கவுன்சிலர் சண்முக பாண்டி ராஜா மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ் வார்டு செயலாளர் மணிகண்டன் ஊத்துக்குளி சையது கண்ணன் மன்னாடிமங்கலத்தில் கிளைச் செயலாளர் ராஜபாண்டி மற்றும் ராமுகுருவி துறையில் கிளைச் செயலாளர் தண்டாயுதம் சி புதூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டுரங்கன் தேனூரில் சோனை முத்துபாலாஜி ஆகியோர் அந்தந்த கிராமத்தில் எம்ஜிஆர் திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.