மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழுமையாக நிரம்பி விட்டன. இதனையடுத்து, அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 71 வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணை இன்னும் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது.இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
