• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை

தொடர் மழை காரணமாக 110 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் ரசாயன கழிவுகளால் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது.

மேட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதாலும் மேட்டூர் அணை 110.50 அடியை எட்டியுள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்து அதிகப்படியான குப்பைகளும், கழிவுகளும் அடித்து வருவதால் நீர் மாசுபட்டு பச்சை பசேல் என்று காட்சியளிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த நுண்ணுயிர் கலந்த கரைசல் கலவையை அணையின் ஊழியர்கள் மின் விசைப் படகு மூலமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தெளித்து வருகின்றனர். இதனால் தண்ணீரில் வீசும் துர்நாற்றம் குறையும் என்றும் கெட்ட நுண்ணுயிரிகள் அழியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிக்கப்படும் கட்டுப்பாட்டு அலுவலகம் இயங்கி வருகிறது என்று மேட்டூர் அணையின் செயற்பொறியாளர் தெரிவித்தார்.