• Fri. Apr 26th, 2024

நெல்லையில் பூக்களின் விலை அதிகரிப்பு வியாபாரிகள் மகிழ்ச்சி!..

By

Aug 19, 2021

நெல்லையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பூக்களின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்த நிலையில் ஆவணி மாதம் பிறந்துள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் 21-ஆம் தேதி கேரளாவில் ஒணம் பண்டிகை கொண்டாடப்படுவதாக உள்ளது.

கேரளாவிற்கு நெல்லையில் இருந்து அதிக அளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும் காரணமாக, நெல்லையில் இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, நேற்று கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப் பூ, 1000 ரூபாய் உயர்ந்து 1500 ரூபாய்க்கும், கிலோ 600 ரூபாய்க்கு விற்ற பிச்சிப் பூ 400 ரூபாய் உயர்ந்து 1000 ரூபாய்க்கும், சம்மங்கி 200 ரூபாய் இருந்து 520 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ், அரளி ஆகிய பூக்கள் 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.பூக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *