• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் அமமுக கட்சியின் சார்பில் எம்ஜிஆர் நினைவு தினத்தில் எம்எல்ஏ அய்யப்பன் மலர்தூவி,மௌன அஞ்சலி

ByP.Thangapandi

Dec 24, 2023

தமிழகம் முழுவம் அதிமுக மற்றும் அமமுக கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36 -வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் வத்தலக்குண்டு சாலையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திருஉருவபடத்திற்கு ஓபிஎஸ் அணி சார்பில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதில் (OPS )நகரச் செயலாளர் சசிகுமார், உசிலம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன், உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் கோஸ்ட்மீன், மாவட்ட ஓட்டுநர் அணிச் செயலாளர் பிரபு, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகைச்சாமி, நகர நிர்வாகி அழகுமாரி, முன்னாள் எம்எல்ஏ பாண்டியம்மாள், வேங்கைமாறன்
மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திருஉருவபடத்திற்கு அமமுக சார்பில் நகரச் செயலாளர் பாண்டி தலைமையில் அமமுக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.