தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்! என்ற இயக்கத்தை முதல்வர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் இன்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில் ; பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களை ஒருங்கிணைக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் உருவாக்கப்பட்டது. கீழடி, ஹிந்தி திணிப்பு, நீட், தமிழ்நாட்டின் மண் மொழி மற்றும் மனத்தின் மீது தலையிடும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் நாகை மாவட்டத்தில் 1 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 56 ஆயிரம் உறுப்பினர்கள் இதுவரை இணைத்துள்ளோம் என்று கூறினார். மேலும், நாளைய தினம் நாகை மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடிகளில் நாகை மாவட்டத்தில் ஓரணியில் இணைத்த உறுப்பினர்களை பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் உறுதிமொழி ஏற்க உள்ளோம். வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி கரூரில் நடைபெற உள்ள பெரியார் பிறந்தநாள் முப்பெரும் விழாவில் அனைத்து வாக்கு சாவடிகளில் முன்னெடுத்துள்ள தீர்மானங்களை ஒப்படைக்க உள்ளோம். இதேபோல வருகின்ற 20 ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் நாகை மாவட்டத்தில் திமுக சார்பாக பிரமாண்டமாக நடைபெறும் என்று கூறினார்.