• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

ByN.Ravi

Feb 25, 2024

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சார்பில், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தொகுதி செயலாளர் சக்கரபாணி, மேற்கு தொகுதி செயலாளர் செல்லப்பாண்டி , மேற்கு தொகுதி தலைவர் முத்தீஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தொகுதி துணைச் செயலாளர் சந்திரசேகரன், தகவல் தொழில் நுட்ப செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னெடுப்பு செய்தனர். நிர்வாகிகள், மேற்கு தொகுதி பொருளாளர் குணசேகர பாண்டியன், பொருளாளர் வாடிப்பட்டி அன்பு செல்வம் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், வாடிப்பட்டி பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். உறுப்பினர்களாங சேர்ந்த அனைவரும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில், தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர பிரச்சாரம் செய்து நாம் தமிழர் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது என, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.