புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள மச்சுவாடி பகுதியில் அமைந்துள்ள டி எல் சி சீயோன் ஜூப்ளி சர்ச்சில் இன்று திருவள்ளுவர் பேரவை சார்பாக கிறிஸ்துவ நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக முன்னாள் உறுப்பினர் சீனு சின்னப்பா அவர்களின் வாழ்த்துக்களோடு தலைவர் டாக்டர் சலீம் அட்வகேட் சந்திரசேகரன் செயலாளர் மத்திய பொருளாளர் போதகர் சுரேஷ் துணைத் தலைவர்கள் விஸ்வநாதன் சிவா சாகுல் ஹமீது சபரிநாயகம் அடிகளார் துணை செயலாளர் சையது இப்ராகிம் ஆலோசனை குரூப்பு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தேவாலயத்தில் பொதுமக்கள் மத்தியில் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் கேக் வெட்டி திருச்சபைக்கு வந்த அனைவருக்கும் கொடுத்து சமாதானம் சந்தோஷமாகிய தெரிவித்து பகிர்ந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




