• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட்.., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்…

ByG.Suresh

Dec 20, 2023

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காரைக்குடியில் வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

குளிர்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கியதாக ஏற்கனவே காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினமும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர், கார்த்திக் சிதம்பரம், உள்ளிட்ட 49 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து இந்திய கூட்டணியின் சார்பில் வருகின்ற 22 ஆம் தேதி இந்தியா முழுவதும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று காரைக்குடி செக்காலை சாலையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது மத்திய அரசின் எதிர்க்கட்சி விரோதப் போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை, காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கலையச் செய்தனர்.