திருக்கார்த்திகையை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மருந்துவாழ்மலை அடிவாரத்தில் 508- க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மெகா தீப ஒளி ஊர்வலம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

மருத்துவாழ்மலை மேலிருந்து பெண்கள் அண்ணாமலையாரை வாழ்த்தி பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக வந்தனர். இந்நிகழ்ச்சியில் 501 பெண்களுக்கு இலவசமாக விளக்குகளை வழங்கி பேசியதாவது: இன்றைக்குமக்களுக்கும் நாட்டுக்கும் அமைதி தேவை. இந்த தீப திருநாளில் இந்தியாவின் முதன்மை மலையான மருந்துவாழ்மலையில் இருந்து மெகா தீப ஊர்வலத்தை அண்ணாமலையாருக்கு வாழ்த்து சொல்லி நடத்திய ஊர்வலம் ஒவ்வொரு குடும்பத்திலும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

தீய எண்ணங்களும், தீயோரின் சூழ்ச்சிகளும், பகைமையும் தீப ஒளியால் சுட்டு எரிக்கப்படும். மருந்துவாழ்மலையின் மூலிகை காற்றை சுவாசித்த அனைவரும் சந்தோஷத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். தமிழகத்தில் இதுபோன்ற ஊர்வலம் நடைபெற்றதை அனைத்து மக்களும் வியப்புடன் பாராட்டினர் என பேசினார்.
இந்த ஊர்வலத்துக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமை வகித்தார்.
மாநில மகளிரணி தலைவி ஸ்ரீ ரங்கநாயகி, குமரி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், குமரி மாவட்ட மகளிரணி தலைவி வரலெட்சுமி, மாவட்ட அமைப்பாளர் அனிதா, பசுமை இயக்க தலைவர் ராமகிருஷ்ண மூர்த்தி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.








