அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம் பூத் கமிட்டி புத்தகத்தை பெற்றுக்கொண்டார்.
தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் விரல் விட்டு எண்ணும் மாதங்களே உள்ள நிலையில் சென்னை தலைமைக் கழகம் அலுவலகத்தில் முதல் கட்டமாக தென்னக மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் பொறுப்பாளர்களை சந்தித்த கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வெற்றிக்கு அடிப்படை பூத் கமிட்டி நிலையில் இருந்து பொது மக்களை சந்தித்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

நிகழ்வில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
இன்றைய கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி மாவட்டம் தேர்தல் பொறுப்பாளருமான வி.எம்.ராஜ லெட்சுமி முன்னிலையில் அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பூத் கமிட்டி புத்தகத்தை அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம் இடம் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வழங்கினார்.