விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் முப்புலி மாடசாமி கோவில் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார்.சேத்தூர் பேரூர் கழக செயலாளர் அய்யனப்பன், செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர். ரகுராமன், மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


தேர்தல் நிதி அதிகமாக வசூல் செய்து கொடுப்பது, திருச்சியில் இருந்து மதுரை வரை சமத்துவ நடைப்பயணம் துவக்க விழா அன்று அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும் என்பன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மதிமுக நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





