• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டம்..,

ByR. Vijay

Oct 22, 2025

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்புடைய துறைகளுக்கான கூராய்வு கூட்டம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில்; உறுப்பினர்கள் முனைவர் வீ.உஷா நந்தினி அவர்கள், திரு. வி.செல்வேந்திரன் அவர்கள், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சு.செல்வகுமார், இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.வ.பவணந்தி ஆகியோர் முன்னிலையில் இன்று (22.10.2025) நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வ.பவணந்தி அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சு.செல்வகுமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திருமதி. புதுக்கோட்டை விஜயா அவர்களின் தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் முனைவர்.வி. உஷா நந்தினி, திரு.வி. செல்வேந்திரன் ஆகியோர்கள் பங்கேற்று குழந்தைகள் நலன் தொடர்புடைய துறைகளான பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறை,

காவல்துறை, குழந்தை தொழிலாளர் நலத்துறை, சுகாதாரத்துறை, குழந்தைகள் நலக்குழு, இளைஞர் நீதிக்குழுமம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் சைல்டுலைன் 1098 ஆகிய துறைகளின் கீழ் நடைபெறும் குழந்தைகள் நலன் தொடர்பான பணிகள் குறித்தும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் குழந்தைகள் நலனை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு செய்தனர். மேலும் நாகப்பட்டினத்தில் செயல்பட்டுவரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தை ஆய்வு செய்து அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலன் குறித்தும் கேட்டறிந்தனர்.